மெய்யான தேவனிடம் வருவதற்கு, நாம்
மனிதர்களுடைய வார்த்தைகளை
விசுவாசிக்காமல், வேதாகம வார்த்தைகளையே
விசுவாசிக்க வேண்டும். ஏனென்றால்
எண்ணற்ற கள்ளக்கிறிஸ்துக்களும்,
கள்ளத்தீர்க்கதரிசிகளும் நிறைந்திருக்கிற
இக்காலத்தில், தேவனுடைய வார்த்தையின்
வாயிலாக மட்டுமே, நம்மால் சத்தியத்தையும்
பொய்யையும் பகுத்துணர முடியும்.
"வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்;
அவைகளால் நித்திய ஜீவன் உண்டென்று
எண்ணுகிறீர்களே; என்னைக்குறித்து
சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே." யோவான் 5:39
தேவனாகிய இயேசுவை சரியாக
உணர்ந்துகொண்டபோது, பரலோக ராஜ்யத்தின்
திறவுகோல்களைப் பெற்ற பேதுருவைப்போலவே,
பரிசுத்த ஆவியின் காலத்தில் வந்த
தந்தையாகிய தேவனையும் தாயாகிய தேவனையும்
நாம் சரியாக உணர்ந்துகொள்ளும்போது,
மாபெரும் பரலோக ஆசீர்வாதங்களை
நம்மால் பெற முடியும்.
பூமியிலிருப்பவைகள் பரலோகத்திலிருப்பவைகளின்
சாயலும் நிழலுமாய் இருக்கின்றன என்று
எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக, பூமிக்குரிய
குடும்ப அமைப்பின் வாயிலாக, பரலோகக்
குடும்ப அமைப்பைப் பற்றி நமக்கு அறிவொளியூட்டி,
பஸ்கா அப்பம் திராட்ச ரசத்தின் வாயிலாகக்
கொடுக்கப்படும் தேவனுடைய மாம்ச இரத்தத்தின்
வாயிலாக மட்டுமே நம்மால் தேவனுடைய
நிஜமான பிள்ளைகளாக முடியும்
என்பதையும் நமக்குத் தெரியப்படுத்தினார்.
(பரலோகக் குடும்பம் தந்தை, தாய் மற்றும்
பிள்ளைகளை உள்ளடக்கியுள்ளது)
நிஜமான தாயைப் பகுத்துணரும் ஞானத்தை
தேவன் சாலொமோனுக்கு கொடுத்ததுபோலவே,
இந்நாட்களில், தேவனுடைய சபையின்
பரிசுத்தவான்களுக்கு வேதாகம
வார்த்தைகளின்
வாயிலாக ஞானம் கொடுக்கப்பட்டு,
தாயாகிய தேவனிடம் வர ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை