இஸ்ரவேலர்கள் தங்கக் கன்றுக்குட்டியை வழிபட்டதால்
மோசே பெற்ற முதல் பத்து கட்டளைகள் உடைக்கப்பட்டன.
இஸ்ரவேலர்கள் தங்கள் பாவங்களை உணர்ந்து
மனந்திரும்பிய பிறகு, பாவமன்னிப்பின் அடையாளமாக
தேவன் அவர்களுக்கு இரண்டாவது முறை வழங்கிய
பத்து கட்டளைகளோடு மோசே இறங்கி வந்தார்.
இதுதான் பாவநிவிர்த்தி செய்யும்
நாளின் தொடக்கமாக இருந்தது.
ஒருவர் பாவம் செய்யும்போது,
பாவநிவிர்த்தி செய்யும் நாள் வரை
அந்த பாவம் தற்காலிகமாக
பரிசுத்த ஸ்தலமான தேவனிடம் செலுத்தப்படும்.
பிரதான ஆசாரியர் மகா பரிசுத்த ஸ்தலத்தில்
பிரவேசித்து, இரத்தம் தெளிக்கும் சடங்கு செய்தபின்பு,
பாவம் முழுமையாக மன்னிக்கப்படுகிறது.
அதுபோலவே, இன்று மகா பரிசுத்த ஸ்தலமான
எருசலேம் அதாவது தாயாகிய தேவனிடம் கிருபை
பெறாமல், ஒருவராலும் முழுமையான பாவ மன்னிப்பையோ
இரட்சிப்பையோ அடைய முடியாது.
அவன் இப்படிப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக்
கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் பிராயச்சித்தஞ்செய்து
தீர்ந்தபின்பு, உயிரோடிருக்கிற வெள்ளாட்டுக்கடாவைச்
சேரப்பண்ணி,
அதின் தலையின்மேல் ஆரோன் தன்
இரண்டு கைகளையும் வைத்து,
அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல
அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப்
பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய
சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு,
அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய
தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான
ஆள்வசமாய் வனாந்தரத்துக்கு அனுப்பிவிடக்கடவன்.
அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய
அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு,
குடியில்லாத தேசத்துக்குப் போவதாக;
அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை
வனாந்தரத்திலே போக விடக்கடவன்.”
லேவியராகமம் 16:20-22
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை