தேவன் கிதியோனின் சேனையைத் தேர்ந்தெடுக்கும்போது, பயந்தவர்களை அவர் நிராகரித்தார். அவர் எப்போதுமே யோசுவாவின் சேனையை பயம்கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்தினார். இதன் வாயிலாக, தேவனுடைய வாக்குத்தத்தத்தை விசுவாசித்து, தைரியத்தோடு முன்னேறுவதே மிக முக்கியமானது என்பதை நம்மால் பார்க்க முடியும்.
தேவனுடைய வாக்குத்தத்தத்தை விசுவாசிக்காத இஸ்ரவேலர்கள், கானான் தேசத்தைப் பற்றி துர்ச்செய்தியை பரப்பி, குறைகூறியதுபோலவே, ஜனங்களுக்கும் சுற்றுப்புறத்துக்கும் பயந்து நாம் தயங்கினால், நம்மால் ஆவிக்குரிய கானானாகிய பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது. நாம் நம்மை ஆசீர்வதிப்பதற்காக கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களும் தாயாகிய தேவனும் அருளிய வாக்குத்தத்தத்தை விசுவாசித்து, தைரியமாய் ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்போது, உலகையே பிரம்மிக்கச் செய்கிற சுவிசேஷத்தின் அற்புதமான கிரியை நடக்கும்.
“இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய். நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர்உன்னோடே இருக்கிறார் என்றார்.”
யோசுவா 1:8-9
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை