தன்னை விசுவாசிப்பவர்கள் பரிசுத்த ஆவியைப் பெறுவார்கள் என்று தேவன் சொல்வதால், அதைப் பெற விரும்புகிறவர்கள் பிதாவின் காலத்தில் யெகோவாss தேவனையும், குமாரனின் காலத்தில் இயேசுவையும், பரிசுத்த ஆவியின் காலத்தில் ஆவியும் மணவாட்டியுமாக வந்த கிறிஸ்து அன்சாங்ஹோங்கையும் தாயாகிய தேவனையும் விசுவாசித்து, அவர்களின் போதனைகளைப் பின்பற்ற வேண்டும்.
தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறவர்களே தேவனை உண்மையாக விசுவாசிப்பவர்கள் ஆவர். நோவா, ஆபிரகாம், மோசே, யோசுவா மற்றும் காலேப் ஆகியோர் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து ஆசீர்வதிக்கப்பட்டதைப் போலவே, இன்று தேவனுடைய வார்த்தைகளான ஓய்வுநாளையும் பஸ்காவையும் ஆசரிக்கும் விசுவாச ஜனங்களும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் என்றார். யோவான் 8:47
நீ உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவர் வழிகளில் நடக்கும்போது, கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே, உன்னைத் தமக்குப் பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார். அப்பொழுது கர்த்தருடைய நாமம் உனக்குத் தரிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள். உபாகமம் 28:9–10
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை