மோசே, நிஜத்தில் இயேசுவின் தீர்க்கதரிசன
பிம்பமாயிருந்தார். ரெவிதீமிலே, மோசே தன்
கையை உயர்த்தினதால், இஸ்ரவேலர்கள் போரில்
ஜெயம்கொண்டனர். இது இயேசு சிலுவையில்
உயர்த்தப்பட்டதால், தேவனுடைய ஜனங்கள்
ஆவிக்குரிய யுத்தத்திலே சாத்தானுக்கு
எதிராக ஜெயம்கொள்ளுவார்கள்
என்பதைப்பற்றின தீர்க்கதரிசனம் ஆகும்.
அநேகர் செத்துப்போனபோது, தேவன்,
"ஒரு சர்ப்பத்தை செய்து அதைக் கம்பத்தின்மேல்
தூக்கி வை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன்
அதை நோக்கிப் பார்த்தால் பிழைப்பான்" என்றார்.
ஆனாலும், அவர்கள் தங்களைக் காப்பாற்றிய
தேவனுடைய வார்த்தைகளை மறந்துவிட்டு,
800 வருடங்களாக அந்த வெண்கல சர்ப்பத்தை
வணங்கி வந்தார்கள். விளைவாக,
அவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டார்கள்.
இது இன்று கிறிஸ்து தன்னுடைய தியாகத்தினால்
ஸ்தாபித்த புது உடன்படிக்கையை மறந்துவிட்டு,
ஜனங்கள் சிலுவையை ஆராதிப்பதினால்
அழிக்கப்படுவார்கள் என்பதைக்
காண்பிக்கிற ஒரு நிழலாகும்.
சிலுவையை உண்டாக்குவது தேவனுடைய
சித்தமல்ல. ஆரம்பகால கிறிஸ்தவர்களுக்கு,
சிலுவை என்பது இயேசு அறையப்பட்ட
ஒரு சபிக்கப்பட்ட மரமே ஆகும்.
கர்த்தருக்கு அருவருப்பான காரியமாகிய
தொழிலாளிகளுடைய கைவேலையால் செய்யப்பட்டதும்
வார்ப்பிக்கப்பட்டதுமான யாதொரு விக்கிரகத்தை
உண்டுபண்ணி ஒளிப்பிடத்திலே வைக்கிறவன்
சபிக்கப்பட்டவன் என்பார்களாக;
அதற்கு ஜனங்களெல்லாரும் பிரதியுத்தரமாக
ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
உபாகமம் 27:15
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை